திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சட்ட சபையில் இன்று பேசிய போது, ஆர். பி. உதயகுமார் ரூ.பத்தாயிரம் கோடியில் ஏரி குளங்கள் புனரமைப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன ஆயிற்று. தி.மு.க ஆட்சியில் அறிவிப்பு என்பது மலையாக இருக்கிறது, செயல்பாடு என்பது மடுவாக இருக்கிறது என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார்.
அப்போது திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் குரலாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரின் ஒத்துழைப்போடு பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகிறேன். பிரபஞ்சம் உருவாகி இத்தனை ஆண்டுகளாகியும் தூய்மையான தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம்தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடி வருகிறோம்.
தமிழக மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏரி குளங்கள் கால்வாய் போன்ற நீர் நிலைகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளை பயன்படுத்தி குடிமராமத்து திட்டம் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆறுகளில் கழிவுநீர் கலப்பது தொடர்கதை ஆகி வருகிறது. ஆறுகளில் கழிவுநீர் தினந்தோறும் கலந்து வருகிறது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்று பார்க்காமல், மக்களுக்காக கொண்டு ரப்பட்ட திட்டம் என கருதி திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் பாய்ந்து ஓடும் கால்வாய்கள் அனைத்திலும் சிமெண்ட் கான்கிரீட் அமைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அவை இப்போது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. 2021-ம் ஆண்டு 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12000 கோடி கடனை அப்போதைய அதிமுக அரசு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு பெற்று வரும் விருதுகளுக்கு எல்லாம் இதை கொடுத்த விவசாயி அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தான்.

மழைக்காலங்களில் பெறப்படும் மழை நீர் அனைத்தும் உபரிநீராக வீணாக கடலில் போய் சேர்கிறது. அந்த நீர் வீணாக கடலில் சென்று சேர்வதை தடுக்கும் விதமாக சரபங்கா என்ற திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த காரணத்தினால் நூற்றுக்கும் கண்மாய்களுக்கு அந்த உபரி நீர் கொண்டு போய் சேர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.
தண்ணீர் சேமிக்கும் முறை சிக்கனத்தின் அவசியத்தை தெரிந்து தான் நீரின் மேலாண்மையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் புரட்சி செய்யப்பட்டது. ரூபாய் பத்தாயிரம் கோடியில் ஏரி குளங்கள் புனரமைப்பு, செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் நீர் மேலாண்மை குறித்த தேர்தல் அறிக்கையில் அறிவித்து விட்டு இப்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன? அறிவிப்பு என்பது மலையாக இருக்கிறது. செயல்பாடு என்பது மடுவாக இருக்கிறது.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு அணை விவகாரம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இவற்றுக்கு உரிய தீர்வு காண என்ன நடவடிக்கையை திமுக அரசு எடுத்தது? இரு தினங்களுக்கு முன்மூன்று மாநில முதலமைச்சர்களை அழைத்து பேசிய தமிழக அரசு, மேற்குறிப்பிட்ட நீர் விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்திருக்கலாமே. நாள் தோறும் 10 ஆயிரம் லாரிகள் மூலம் ஓசூர் வழியாக தமிழகத்தில் இயற்கை வளங்கள் கடத்தி செல்லப்படுகிறது. அவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.




