இந்திய தென்னக ரயில்வே பாதுகாப்பு பிரிவில் ஒன்றித்து பயணித்த 42_பேர்
கன்னியாகுமரியில் 45_ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தனர்.
இந்தியாவின் தென்னக இரயில்வே துறையில் 1980 ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்து, திருச்சியில் பயிற்சிக்கு பின், தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி, சென்னை, திருவனந்தபுரம் டிவிஷன்களில் பணியாற்றிய 42_பேர் பணிக்காலத்தில் ஆய்வாளர்களால் பதவி உயர்வும் பெற்றவர்கள்.

வாழ்க்கை பயணத்தில் மணம் செய்து குடும்பங்களாக மாறியவர்கள் 42_பேர் பல்வேறு டிவிஷன்களில் பணியாற்றிய பணி ஓய்வும் பெற்ற 42_பேர் மீண்டும் ஒரு சந்திப்பிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கடந்து கால ஓட்டத்தில் வெளி மாநிலங்களில் தற்போது வசித்து வரும் நிலையில், எல்லோரும் மீண்டும் சந்தித்து, இவர்கள் கடந்து வந்த காலத்தை திரும்பி பார்க்க ஆசைப்பட்டு, தற்போது சொந்த ஊரான புளியங்குடி யில் வசிக்கும் பால்ராஜ் கடந்த இரண்டு ஆண்களாக கொண்ட தொடர் முயற்சியாக, கடிதம் மூலமாக, தொலைபேசி, கைபேசி மூலம் கொண்ட தொடர் முயற்சியின் வெற்றியாக, கன்னியாகுமரியில் இன்று (மார்ச்_23) ஓய்வு தினமான ஞாயிற்றுக்கிழமை திரிவேணி நட்சத்திரம் விடுதியில் பல பேர் குடும்ப உறுப்பினர்கள் உடன், சிலர் மனைவியுடன் ஒன்றாக சந்தித்தது குறித்து, இந்த சந்திப்பு நிகழ்விற்கு பாலமாக இருந்த பால்ராஜ் அவரது உடன் இருந்த பெரிய கருப்பன், சந்திரசேகர், நடராஜன், சங்கர் என பலரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

எங்கள் உடம்பிற்கு முதுமை என்பதால் பணி ஓய்வு பெற்றாலும், இன்று கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின், தென்னக இரயில்வே பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு டிவிஷன்களில் பணியில் சேர்ந்த அந்த முதல் நாள் போன்ற உணர்வை, உற்சாகத்தை எங்கள் உள்ளத்தில் அடைகிறோம். இளைஞர்களாக இருந்த அந்த காலத்தில் முதல் திருப்புமுனை தென்னக இரயில்வே துறையில் பணிக்கு சேர்ந்தது. அதன் அடுத்த மாற்றம் தனியாக இருந்த நாங்கள் எங்கள் வாழ்க்கை துணையாளின் கரம் பற்றியது. தந்தையாக மாறியது. பணி இடங்களில் பல்வேறு அதிகாரிகளின் கீழ் பணியாற்றியது. காவலர்களாக பணியில் சேர்ந்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றது. பணி ஓய்வுக்கு முன்பே தாத்தா, பாட்டி என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் 45_ஆண்டுகளுக்கு பின், நாங்கள் நண்பர்கள் குடும்ப உறவுகள் ஒன்றாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டோம்.

நாங்கள் எல்லாம் அதிசயித்து பார்த்தது மேக கூட்டங்கள் தொட்டு வணங்கிச் செல்லும் உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலை, கடலில் கட்டியுள்ள கண்ணாடி பாலத்தில் பாதம் பதித்து நடந்தபோது. எங்கள் மீது அலைகூட்டம வீசிய கடல் நீர் துளிகள் தந்த சிலிர்ப்பு. சுவாமி விவேகானந்தர் மண்டபத்தின் கலை தோற்றம் எல்லாவற்றையும் ஒன்றித்து பணியாற்றிய 42 பேரும், 45 ஆண்டுகளை கடந்து மீண்டும் சந்தித்து உரையாடியது, உறவாடியது எல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாத புதிய அனுபவத்தை இன்று உணர்கிறோம் என தெரிவித்தார்கள் ஒற்றை குரலில்.







