தமிழக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் கால வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வில்லை இந்நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு பட்ஜெட்டில், தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதனைக் கண்டித்தும், பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றாததை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ போராட்ட குழு அறிவித்து இருந்தது.
அதன்படி மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டம் இன்று காலை துவங்கியது. நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.