விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டவெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளாரும், செவல்பட்டி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பவுன்ராஜ், இவரது மனைவி மாரீஸ்வரி முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள், சிவகாசி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சரவணப் பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நினைவு தின நிகழ்ச்சியில் அதிமுக கிளைச் செயலாளர் பவுன்ராஜ்வுடன் பழைய நினைவுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நினைவு படுத்தினார். அதைக் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் நெகழ்ச்சி அடைந்தனர்.

