பெருங்களத்தூரில் மூன்று மாதம் காலமாக இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு ஆதங்கத்தை அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இரவு மொட்டை மாடி மொட்டை மாடி யாக தாவித்தாவி மர்ம நபர் ஓடுவதாக பெண் கூறியதால் பகுதி இளைஞர்கள் ஒன்று திரண்டு தேடி வருகின்றனர்.

முட்புதருக்குள் பதுங்கி இருக்கிறானா என ஜேசிபி இயந்திரத்தை வைத்து தேடுதல் வேட்டை மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் உள்ளது. பலமுறை தகவல் தெரிவித்தும் தாமதமாகவே காவல்துறையினர் வருவதாக ஆதங்கம்
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் 58 வது வார்டு புத்தர் நகர் மற்றும் திருவள்ளூர் தெருகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மர்ம நபரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் சைக்கோ திருடன் இந்த பகுதியில் சுற்றி திரிந்து வருவதாகவும் பலமுறை இது குறித்து பெருங்களத்தூர் பீர்கான்கரணை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த போதிலும் போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் இரவு நேரத்தில் இருப்பதாக வீடியோ வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இரவு வீட்டின் கதவை தட்டி விட்டு யாரோ ஓடுவது போல் இருந்ததால் அப்போது இளைஞர்கள் கையில் கம்புடன் தெருத்தெருவாக வலம் வருகின்றனர்.அது மட்டும் இன்றி பெருங்களத்தூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பலமுறை தகவல் தெரிவித்தும் இன்று தான் காவல்துறையினர் இதுபோன்று தேர்தலில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மர்ம நபர் நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் தற்சமயம் வெளியிட்டுள்ளனர்.
பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.