• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காட்டெருமை கூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம்..

ByG. Anbalagan

Mar 21, 2025

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறங்களில் காட்டெருமை உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
சமீபகாலமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று கோத்தகிரியில் மாலை நேரத்தில் காட்டெருமைகள் ராம்சத்ந்பகுதியில் உலா வந்ததால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த காட்டெருமை கூட்டம் கோத்தகிரி ராம்சத்ந் சாலை வழியாக காந்தி மைதானம் பகுதியில் உலா வந்தது இதனை பார்த்த பொதுமக்கள் பயந்து ஓடினர்.
காட்டு எருமைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.