கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம் பிடிப்பட்டது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் பணத்தை கொச்சி கொண்டு செல்லும் வழியில் போலீசார் நடத்திய சோதனையில் பிடித்து உள்ளனர்.

இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பிடிப்பட்ட பணத்தையும் சிவப்பிரகாஸையும் போலீசார் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.
கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாசை பிடித்து உள்ளனர்.