• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை: டிசம்பர் 1ஆம் தேதி அமல்

Byகாயத்ரி

Nov 29, 2021

ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், இஸ்ரேல், ஹாங்காங், சிம்பாப்வே, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஓமைக்ரான் ஆபத்து கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்தியாவில் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே பயணிகள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தாலும் கூட ஒரு வார சுய கண்காணிப்பில் இருப்பது அவசியம். ஓமைக்ரான் ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருவோரில் ஏதேனும் 5% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அனைவரும் விமான நிலையத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கூட 14 நாட்கள் சுயகண்காணிப்பில் இருப்பது அவசியம். புதிய கட்டுப்பாடுகள் டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.