மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் வில்லாபுரம்
வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணத்தை நிகழ்ச்சி மாவட்ட கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை வகித்தார். அபுதாகிர் வரவேற்புரை கூறினார். மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாமதுரை கத்தோலிக்க திருச்சபை அருர்த்தந்தை பால் பிரிட்டோ மதுரை டவுன் காஜி சபூர் வகையதின் வள்ளலார் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சக்தி அறிகரன் ஆகியோர் சமூக நல்லிணக்கை உத்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை பால் பிரிட்டோ குருகையில்இஸ்லாமிய சகோதரர்கள் எடுத்துக் கொள்ளும் நோன்பு இந்த சமூகத்திற்கு மனிதனை உடலிலும் உள்ளத்திலும் தூய்மைப்படுத்துகிறது .
இதேபோல்தான் எங்களது நோன்பு காலங்களில் தவ வாழ்வை மேற்கொள்கிறோம். எகிப்தில் உள்ள எங்களது பேராய அபுசிகா கூறுகையில் நோன்பு காலங்களில் மனிதர்களின் மனங்களையும் உள்ளங்களையும் தூய்மை
எந்த சூழ்நிலையும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்த்தத்தான் இந்த நோன்பு வாழ்க்கை வருகிறோம். இந்த நோன்பு மூலம் நாம் இணக்கமாக வாழ்கிறோம் இதை உலகத்திற்கு காட்டுகிறோம் .இதை தமிழ் சமூகம் மூலம் உலகத்திற்கும் எடுத்து காட்டுகிறோம் என கூறினார்.

வள்ளலார் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சக்தி ஹரிகரன் கூருகையில்
வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என கூறினார்கள் அந்தஇந்த கருணையின் வடிவமாக அந்த கருணையின் இறக்கமாக இஸ்லாமியர்கள் இந்த மார்க்கத்தை கடைபிடிக்கிறார்கள் இந்த நோன்பு காலத்தில் உங்கள் மனநிலை பக்குவப்படுத்தி நாம் அருமையாக உணர்கிறோம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நோன்பை முடிக்கும் போது நிறைய மாற்றங்கள் உருவாகிறது. இந்த நோன்பை அனைத்து மத பின்பற்றினால் அன்பு கருணை நிலை பெற்று இருக்கும்கடவுளின் பெயரால் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள்.
உண்மையான இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலும் செயல்பட மாட்டார்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் இருக்கின்ற சிக்கந்தர் மலை மீதுஇஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக சென்றுள்ளனர்.இந்த பாதுஷாவுக்கு கலர் அமைத்து தந்ததே இந்த மண்ணை ஆண்ட பாண்டிய மன்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவறாகவராக எடுத்துரைத்து கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையான இந்து சகோதர்கள்நாங்க எல்லாம்ஒற்றுமையாக வாழ வலியுறுத்தி வருகிறோம் மதங்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லைஎன கூறினார்.
பின்னர் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல் ராஜன் செல்லப்பா கொள்கையில்14 மணி நேரமாக உங்களை இறைவனிடம் ஒப்படைத்து நோன்பு இருக்கின்ற அந்த நிகழ்ச்சியை திறக்கின்ற நேரம் உங்களை சந்திப்பதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் உங்களை உணர்வுகளை மதிக்கக்கூடிய அடிப்படையில் உங்களுடன் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகள் தான் உலகில் அனைவரும் பின்பற்றும் பொன்மொழியாக உள்ளது. அனைவருடன் ஒற்றுமையும் சகோதரத்துடன் வாழ வலியுறுத்தியதை கடைபிடிக்கின்றனர். எஸ்டிபிஐ கட்சியினர் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது இனி தொடரும். பொதுச்செயலாளர் வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.
சமய நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் என்பது பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.