• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதியோர் இல்லத்தில் 60 பேருக்கு கொரோனா

Byமதி

Nov 29, 2021

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சோர்கான் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள மற்ற முதியவர்களுக்கும், வேலை செய்வோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 109 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 55 பேருக்கு முதியோருக்கு, ஊழியர்கள் 5 பேருக்கும் தொற்று உருதியானதுள்.

அதேபோல ஊழியர்களின் உறவினர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 1½ வயது குழந்தைக்கும், கர்ப்பிணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளான 55 முதியவர்களும் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.