• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி அருகே நகை, பணம் கொள்ளை அடித்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், கடந்த ஜூலை 3ஆம் தேதி தனியாக இருந்த முதியோர் தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, சுமார் 12 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டை யில், சம்பவம் நடந்த வீட்டில் வேலை பார்த்த பாக்கியம் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய தில் முதியோர் தம்பதியை கட்டிப்போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில், திருட்டுக்கு உடந்தையாக இருந்த மஞ்சுளா, அவரது மகன் அசோக் குமார் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொடுத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.