விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணன் தம்பியிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக 11.5 லட்சம் பண மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

சாத்தூர் வெங்கடாசலபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜா 35 இவர் 2020ல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் டி என் பிசி தேர்வுக்கு தயாராகி வந்தார். அவருடன் பணிபுரிந்தவர் தேவா, திருவாரூரை சேர்ந்த ரம்யா பலருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளார். அவரிடம் பணம் கொடுத்தால் உங்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் என தேவா கூறினார். இதன் பின்னர் ரம்யாவை மகேந்திரராஜாவுக்கு தேவா அறிமுகம் செய்தார். நாமக்கலில் ரம்யா சொந்தமாக டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நடத்துவதாகவும் அங்கு ரயில் துறையில் உயர் ரீதியாக பணிபுரிந்து வரும் சிவராமன் வருவார். அவரிடம் பணம் கொடுத்தால் ரயில்வே துறையில் கமர்சியல் கிளர்க் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மகேந்திரராஜா 2020 பிப்ரவரி 18,25,28 ல் ஜிபி மூலம் ரம்யாவுக்கு ரூபாய் 3 லட்சம் அனுப்பினார். ரூபாய் 4 லட்சத்தை 2020 மார்ச் 4ல் நாமக்கல் சென்று ரம்யாவிடம் நேரில் கொடுத்தார். தனது தம்பி முரளிக்கு அலுவலக உதவியாளர் பணிக்காக ரூ 4.5 லட்சத்தை சிவராமனுக்கு ஜிபே மூலம் 2020 மே 6, செப். 10,12,30 அக்., 2 ஆகிய தேதியில் அனுப்பினார்.

இவருக்கும் வேலை வாங்கித் தருவதோடு பணத்தைக் கேட்டதற்கு ரம்யா கொலை மிரட்டல் விடுத்தார். இதை எடுத்து தேவா ரம்யா சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தூர் ஜே எம் 1 நீதிமன்றத்தில் மகேந்திரராஜா மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி சாத்தூர் போலீசார் இவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….