• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நெற்குப்பையில் விமர்சையாக கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணிகரை பேருந்து நிறுத்தம் அருகில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில், நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன் முன்னிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக  கோஷங்கள் முழங்க திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு லட்டு வழங்கினர். மேலும் ஊராட்சி மன்ற தொடக்க பள்ளியில் உள்ள கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பிஸ்கட் பாக்கெட் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமிக்கண்ணு, நகர அவைத் தலைவர் முத்து,வர்த்தக அணி அமைப்பாளர் புசலான், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், மாணவரணி பாலமுருகன், வார்டு இளைஞரணி ராக்கி ராமநாதன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.