சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. பங்குச்சந்தை வீச்சி, போர் சூழல் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கம் சவரன் விலை 65 ஆயிரம் ரூபாயைக் கடந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்கிழமை) ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 65,680 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 18) தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் .8,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் .66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)