சிவகாசி பகுதியில் பலத்த மழை விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ,திருத்தங்கல், ஆமத்தூர், செங்கமலநாச்சியார்புரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்ததால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது .மேலும் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு வாகனங்களில் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் அகழாய்வு பணி பாதிக்கப்பட்டதால் குழிகள் சேதமடையாமல் இருக்க தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக குழிகளை தார்ப்பாய் போட்டு மூடினர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)