• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு..

ByR. Vijay

Mar 17, 2025

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது*

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டத்தில் பங்கு பெற சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து கைது செய்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை முன்பு நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் பாஜகவினர் முற்றுகையிட்டு மு க ஸ்டாலின், செந்தில் பாலாஜி படங்களை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசுக்கு ஏதிராக கண்டன முழக்கங்களில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தடையை மீறி பாஜகவினர் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பாஜகவினரின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.