• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

ByArul Krishnan

Mar 17, 2025

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூஷன் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் வெங்கடேசன் (வயது – 42) இவர் மங்கலம்பேட்டையில் சொந்தமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார்.

இவரிடம் டியூஷன் படிக்க சென்ற பிளஸ் டூ மாணவியிடம் கடந்த 14ம் தேதி தவறாக நடக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பிச் சென்று பெற்றோரிடம் விபரத்தை கூறினார். அதன் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்தனர்.

இவருக்கு திருமணமாகி மனைவி வயது 18 மற்றும் 13 வயதில் மகன், மகள் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.