• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசாவுடன் சிக்கினால் 7 ஆண்டு சிறை!

ByP.Kavitha Kumar

Mar 17, 2025

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று
நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். அப்படி வரும் வெளிநாட்டினரின் வருகை இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் பாஸ்​போர்ட் சட்​டம் (1920), வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம் (1939), வெளி​நாட்​டினர் சட்​டம் (1946), குடி​யுரிமை சட்​டம் ஆகிய 4 சட்​டங்​களால் தற்​போது நிர்​வகிக்​கப்​படு​கிறது. இந்த சட்​டங்​களின்​படி, வெளி​நாட்​டினருக்கு பல கட்​டுப்​பாடு​கள் உள்​ளன. இந்த நிலையில் ஏற்கெனவே உள்ள நான்கு சட்டங்களுக்குப் பதிலாக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025- எற் புதிய மசோதாவை உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கடந்த 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்ட இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த புதிய மசோதாவில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களைத் தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

இந்த புதிய மசோதாவில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, : இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி ஒரு​வர் நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ அல்​லது இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, 2 ஆண்​டு​கள் முதல் அதி​கபட்​சம் 7 ஆண்​டு​கள் வரை சிறைத்தண்​டனை விதிக்​கப்​படும்.

மேலும், ரூ.1 லட்​சம் முதல் ரூ.10 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும். மேலும், வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை உணவகங்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் , நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம். வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.