• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி மனு

Byகாயத்ரி

Nov 27, 2021

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு கடந்த 2017ல் அறிவித்து அரசாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சொத்துக்களை கையகப்படுத்தவதற்கான இழப்பீடாக ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு ரூ.67 கோடியே 90 லட்சம் இழப்பீடாக அரசு அறிவித்தது.இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி சேஷசாயி தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ‘வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது. உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67 கோடியே 90 லட்சத்து 52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தீபா, தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.