• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

ByR. Vijay

Mar 6, 2025

நாகையில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம், வீதி வீதியாக சென்று கையெழுத்து பெற்ற பாஜகவினர் : பாஜக செய்தி தொடர்பாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினத்தில் கையெழுத்து இயக்கம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாஜக செய்தி தொடர்பாளருமான தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, நகரத் தலைவர் சுந்தர் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். பாஜகவினர் வீடு வீடாக சென்று பள்ளிகளில் மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்வது குறித்து பெற்றோரின் கருத்துக்களை அறிந்து கையெழுத்து பெற்றனர்.