மாமனார் வீட்டில் சீதனமாக கொடுத்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகன்
வாகனத்தில் நிறுத்திய ஐந்து நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர்
கண்ணகி தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது-30)
இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் சீதனமாக இருசக்கர வாகனத்தை மாமனார் வீட்டில் கொடுத்துள்ளனர்,தினமும் பத்திரமாக பார்த்து வந்துள்ளார்.

இவர் பிளமிங் வேலை செய்து வரைவதால் வழக்கு போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது காமராஜபுரம் பிரதான சாலையில் அவரது இருசக்கர
வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்துள்ளார்,அப்போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் இருசக்கர வாகனம் காணாமல் போன இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதி உள்ள சி.சி.டிவி கேமரா காட்சியை ஆய்வு செய்து போது இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஐந்து நிமிடத்தில் மர்ம நபர் ஹெல்மற்றுடன் வந்து இருசக்கர வாகனத்தை ஒட்டிச் சென்றது தெரிய வந்தது. எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சமீப நாட்களாக தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் தொடர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தில் உள்ளனர்…