• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை

ByKalamegam Viswanathan

Mar 4, 2025

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை எஸ் பி நேரில் விசாரணை.. காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு தனி படையினர் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு எதிர்ப்புறம் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் துர் நாற்றம் வீசுவதாகவும் மனித உடல் இருப்பதாக பெருங்குடி காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் மோப்ப நாய் தடவியல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்ததில்.அந்த மூட்டைக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் இருந்ததும் உடலில் நெஞ்சு பகுதியில் இரு காயங்கள் இருந்தும் தெரிய வந்தது.

பெண்ணின் உடல் இறந்து நான்கு நாட்களாக அழுகிய நிலையில் இருப்பதும் முகங்கள் சேதமடைந்ததால் அடையாளம் காண்பது சிரமம் இருப்பதாகவும், கைரேகையை கொண்டு அடையாளம் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை திருமங்கலம் காவல் ஆய்வாளர், சரவணகுமார், தலைமையிலான தனிப்படையினர்
அதிதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.