தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 18வது நிகழ்ச்சியும், தமிழ் செம்மல் விருது பெற்ற நூல் ஆசிரியருக்கு பாராட்டும் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். சிவசாமி, கிருஷ்ணா நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சங்கரேஸ்வரி வரவேற்றுப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர், எழுத்தாளர் தேனி சுந்தர் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் நூலாசிரியர் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் செயற்கை நுண்ணறிவு குறித்து எழுதிய மனிதனா இயந்திரமா? வெல்லப் போவது யார்? என்கிற நூலும் கம்பம் புதியவன் என்ற பேரா.முனைவர் செந்தில் குமார் எழுதிய ஒத்த வீடு சிறுகதைத் தொகுப்பு நூலும் அறிமுகம் செய்யப்பட்டது. நூல் பற்றி ஆசிரியர்கள் சரவணன், செந்தில், நித்தியானந்தம், ஆபிதா பர்வீன், லாவண்யா ஆகியோர் பேசினர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்ச் செம்மல் விருது அறிவிக்கப்பட்ட நூலாசிரியர் கம்பம் புதியவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கிளைப் பொருளாளர் கௌசல்யா நன்றி கூறினார்.