• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Mar 3, 2025

திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு விளக்கு அருகில் உள்ள கீழ்பாளத்தில் வளைவில் அதிவேகமாக இருசக்கரத்தில் வந்த இளைஞர் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கூத்தியார் குண்டு விளக்கு அருகே கீழ் பாலம் வளைவில் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் அதிவேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டின்றி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் இளைஞருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்த போது, இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல் கட்ட விசாரணையில் கொடைக்கானல் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் மதுரை கப்பலூர் அருகே சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இன்று விடுமுறை என்பதாலும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சூர்யா விலை உயர்ந்த (பல்சர் 200) இருசக்கர வாகனத்தில் கப்பலூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கூத்தியார் குண்டு விளக்கு அருகே உள்ள கீழ் பாலத்தின் வளைவில் அதிவேகமாக சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடைமேடையில் மோதி பறந்து விபத்துக்குள்ளானது. இதில் சூர்யாவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். பின்னர் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.