• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

கேரள மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து செல்பவர்களுக்கும் கேரளாவில் இருந்து இங்கு வருபவர்களுக்கும் கட்டாய பரிசோதனை.மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி….

Byadmin

Aug 1, 2021

கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க இன்று முதல் தொடர்ந்து மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதற்கான முகாமை இன்று மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ” கேரளாவில் கொரானா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்பவர்களுக்கும் இன்று முதல் மாவட்ட எல்லையில் கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கொரானா தடுப்பூசிகள் போட்டு கொண்டவர்களும் தடுப்பூசி போடாதவர்களும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரானா மூன்றாவது அறை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.