• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா

ByKalamegam Viswanathan

Feb 27, 2025

விளாங்குடி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவில் சூரியனார் கோவிலின் இளைய சன்னிதானம் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி சன்னதியில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட மற்றும் அருகில் இருக்கக்கூடிய ஏராளமான பொதுமக்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு இருளப்ப சாமிக்கு 16 வகையான பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இருளப்ப சுவாமிக்கு அபிஷேகங்கள் தீபாராதனை என வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் சூரியனார் கோயிலின் இளைய சன்னிதானம் மௌனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல் பிள்ளை ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.