• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மது அருந்த பணம் தராத மனைவி குத்திக் கொலை

ByKalamegam Viswanathan

Feb 27, 2025

மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி. இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டிச்செல்வி இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தையும், ஆறு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

கருப்பசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்றும் மது போதையில் வீட்டிற்கு வந்து நள்ளிரவில் தகராறு செய்துள்ளார்,பின்னர் தூங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்த நிலையில் பணம் தர மறுத்த மனைவி பாண்டிச்செல்வியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி துடித்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டி செல்வி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து உடனடியாக திடீர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கருப்பசாமியை திடிர்நகர் போலீசார் தேடி வருகின்றனர்.மது அருந்த பணம் தராத மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.