• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகள் பிரார்த்தனை

ByT.Vasanthkumar

Feb 22, 2025

கமல்ஹாசன் நீடூடி வாழ வேண்டும் என்று மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சியினர் 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கட்சி கொடியற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மக்கள் நீதி மையம் எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற கொடி ஏற்றும் விழாவில், மாவட்ட பொருளாளர் தங்கமயில் ரமேஷ் முன்னிலையில் மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நிர்மல், மக்கள் நீதி மையம் பொன் சங்கை, பேரவை மாநில துணைத்தலையர் ரவிச்சந்திரன், நற்பணி இயக் மாவட்ட அமைப்பாளர் ஜம்ஜம் சாதிக், பாஷா அபயார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரம்பலூர் துறைமங்கலம் அன்பகம் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு லட்டு வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் தங்கமயில் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சண்முகம், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் சாதிக் பாஷா, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நிர்மல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்பகம் மனவளர்ச்சிக்கு குன்றிய பள்ளி குழந்தைகள் கமல்ஹாசன் நீடூடி வாழவும் ராஜ்யசபா எம்பி வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.