• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மிக பழமையான மன்னர் பள்ளியின் 168ஆம் ஆண்டு விழா

ByG.Suresh

Feb 21, 2025

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மிகப் பழமை வாய்ந்த மன்னர் மேல்நிலை பள்ளியின் 168 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது.

சிவகங்கை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் வாரிசுதாரர்கள் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருவது மன்னன் மேல்நிலைப் பள்ளி ஆகும். இந்த பள்ளி ஆனது 1856 ஆம் ஆண்டு ஸ்ரீமத் போத குருசாமியால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இரண்டு தலைமுறைகளை கண்ட இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்சமயம் பல்வேறு துறைகளின் சிறந்து விளங்கி வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் 168 ஆவது ஆண்டு விழாவானது இன்று கொண்டாடப்பட்டது. சிவகங்கை ராணி டி.எஸ்.கே மதுராந்தகி நாச்சியார் தலைமை வகிக்க, ராஜ்குமார் மகேஷ்துரை முன்னிலை வகிக்க, பள்ளியின் செயலர் குமரகுரு வரவேற்புரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குறிப்பாக ராணி வேலு நாச்சியாரின் சரித்திர வரலாறு நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தன.