பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட M.K. நல்லூர் கிராம பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் சாராய ஊறல் போடுதல் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் வினோத்கண்ணன் மற்றும் தலைமை காவலர் செல்வராஜ், தலைமை காவலர் ரமேஷ், முதல் நிலை காவலர் லட்சுமணன்ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்த நிலையில் கண்ணன் (54/25) த/பெ முருகன், மெயின்ரோடு, MK நல்லூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் மேட்டு காலிங்கராய நல்லூர் ஏரி குட்டையில் சட்ட விரோதமாக சாராயம் மற்றும் சாராய ஊறல் போட்டதைக் கண்டுபிடித்து. எதிரியை கைது செய்து, எதிரிடமிருந்து நாட்டு சாராயம் – 05 லிட்டர், சாராய ஊரல் – 30 லிட்டர், ஆகியவை பறிமுதல் செய்து. எதிரியின் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.