வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற தென்னிந்தியாவில் இருந்து சென்ற 6 தமிழ்நாடு வீரர்கள் உள்ளிட்ட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள், இன்று ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்கச் செல்லும் கூட்டத்தால் முன்பதிவு செய்திருந்தும் அதில் ஏற முடியாமல் தமிழக வீரர்கள், கொண்டு சென்ற உபகரணங்களுடன் வாரணாசி ரயில்நிலையத்தில் தவித்தனர்.
தமிழகம் வருவதற்கு தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று அவர்கள் வீடியோ பதிவை வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)