பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு வாங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமாகியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். அது காலை கலெக்டர் தலைமையில் 10:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மணி சுமார் 11:30 மணி ஆகியும் பொதுமக்களில் இருந்து மனுக்கள் பெறாமல் அதிகாரிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலேயே விவாதித்துக் கொண்டிருந்தனர்.


குழந்தைகளுடன் வந்தவர்கள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், கடும் அவதி அடைந்தனர். வழக்கம்போல் காலை 10 30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியும். ஆனால், கலெக்டர் கிரேசின் அலட்சியத்தால் சுமார் ஒரு மணி நேரம் கால தாமதமாக குறைதீர்க்கும் கூட்டம் தொடங்கியதால், மனு கொடுக்க வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர். அதிகாரிகள் மக்களை மதிப்பதே இல்லை. மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாக வாழும் அவர்கள் அவர்களின் குறையைக் கேட்க ஒதுக்கும் 3 மணி நேரத்தில் கூட ஒரு மணி நேரத்தை வீணடித்த சம்பவம் மனு கொடுக்க வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

