• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண் மீது சொகுசு கார் மோதி படுகாயம்

ByKalamegam Viswanathan

Feb 10, 2025

மதுரையில் சாலை ஒரமாக நின்றிருந்த பெண் மீது சொகுசு கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்

மதுரை யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 52) பூ வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தனது மகளின் புதுமனை புகு விழாவிற்காக நேற்று மாலை ஒத்தக்கடையில் பொருட்களை வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்த போது, அதி வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முத்துலட்சுமி மீது மோதியதில் முத்துலட்சுமிக்கு வலது கால் முறிந்த நிலையில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து முத்துலட்சுமி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்தாரா? அல்லது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்ததா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.