• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பிப்.14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி, கொய் மலர்களுக்கு கிராக்கி

ByG. Anbalagan

Feb 9, 2025

காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நீலகிரியில் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பிப்.,14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கோத்தகிரியில் கொய்மலர் ஏற்றுமதி பணி தீவிர மாக நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் கொய்மலர்கள் பெங்களுர், ஓசூர் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதில், 10 மலர்கள் கொண்ட லில்லியம் ஏசியாடிக் மலர் கொத்து, 300 ரூபாய், ஓரியன்டல் கொத்து, 700 ரூபாய், கார்னேஷன், 200 ரூபாய் வரை விற்பனையாகின்றன. ஜெர்பரா ஒரு மலர், 8ரூபாய் என விற்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கொய்மலர் பயிர்யிட்டு விசாயிகள் கூறுகையில், ”காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர்கள் விலை உயர்ந்து வருகிறது.

ஓசூரில் விளையும் ரோஜா மலரில் நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைந்தது.

”இதனால், நீலகிரியில் விளையும் லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்ற கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதனால் கொய்மலர் பயிர்யிட்டு உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்