முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 252 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 148 கனஅடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.40 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 148 கன அடி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 556 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 2520 மில்லியன் கனஅடியாக உள்ளது.