மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 103 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி மதுரை செக்கிகுளம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பயனாளிகளுக்கு ஆணையை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜாக்கூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகரின் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழைகளை தேர்வு செய்யப்பட்டு சலுகை விலையில் வீடு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வணிகவரித்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பவர்களே நிர்வாக காரணத்திற்காக மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எந்த பகுதியில் இருந்தாலும் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இந்த ஆறு மாதத்தில் செய்து வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கொள்முதல் செய்த நெல் தரமற்ற முறையில் இருப்பதன் காரணமாகவே தற்போது வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்தார்.










; ?>)
; ?>)
; ?>)