திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் செல்லக்கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக வீடியோ வெளியிட்ட நிலையில், மதுரை பாஜக கட்சியினர் தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது..,
அவரவர் மத வழிபாட்டை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் தொழுகை நடத்திக் கொள்ளலாம். சைவ கோவில் இருக்கக்கூடிய மலை மீது உயிர்பலி இடுவது, அசைவ உணவு உண்பது தவறு.
நானும், அமைச்சர் சேகர்பாபுவும் நண்பர்களாக இருக்கிறோம். எங்களுக்கிடைய விரோதம் மூட்டி விடாதீர்கள்.








