அமெரிக்கா முழுவதும் அரிய வகை பனிப்புயல் வீசியதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ் லூசியானா, மிசிசிபி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது.
அந்நாட்டில் 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் மில்வாகீ பகுதிகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடுமையான பனிப்பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் ஜார்ஜியா, மிசிசிபி மற்றும் புளோரிடா மாகாண ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.








