• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு

ByKalamegam Viswanathan

Jan 16, 2025

ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு வழங்கி பொன் குமார் அசத்தியுள்ளார்.

மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து பரிசளித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி 2021, 2022, 2023, 2024 ம் ஆண்டுகளில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்கியுள்ளார்.
தற்போது 6- வது ஆண்டாக பாலமேடு ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு சிறந்த காளைக்கு நாட்டு பசு மாட்டை கன்றுடன் வழங்கி உள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கார், பைக், மெத்தை உட்பட பெரிய வணிகப் பரிசுகளை தவிர்த்து நாட்டு மாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரிடம் பொன்குமார் கோரிக்கை விடுத்து வருகிறார்.