• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் சமத்துவ பொங்கல் விழா!

ByKalamegam Viswanathan

Jan 13, 2025

மதுரை உலகனேரி அருகே உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான சினி வினோத் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் அப்துல் ஜப்பார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு, வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா நோபல் மாநில துணைச் சேர்மன் செல்வக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.

இதில் பொங்கல் வைத்தல், வேலு ஆசான் கலைக்குழு தப்பாட்டம், ஜோதி ஜெகன் கலைக்குழு ஒயிலாட்டம், முதியோர்கள் நடிகர்களுடன் விளையாட்டுப் போட்டி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, போட்டிகள் நடைபெற்றன.

தொடர்ந்து, அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு, சன் டிவி, விஜய் டிவி, புகழ் நடிகர்கள், முதியோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.