• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிர்ச்சி… புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகளைத் தாக்கக்கூடிய மெட்டாப் நியூமோ வைரஸ் (ஹெச்எம்பிவி) தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஹெச்எம்பிவி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 வயது சிறுமி தொடர்காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஹெச்எம்பிவி சோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே ஜிப்மர் மருத்துவமனையில் 5 வயது சிறுமி ஒருவர் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார். இதன்மூலம் புதுச்சேரியில் இரண்டு குழந்தைகளுக்கு இதுவரை ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.