சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால்,
நற்பண்புகளை அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால்,
இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால்,
தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,
உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
பாரதியார்-நற் சிந்தனைகள்
துன்பம் நம்மைத் தீண்டும்போது, கலங்காமல் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அப்படி சிரிக்கத் தொடங்கினால் அந்தச் சிரிப்பே துன்பத்தை வெட்டுகின்ற வாளாக மாறிவிடும்.
கோயிலுக்குப் போனாலும், போகாவிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை. தெய்வத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும் தவறில்லை. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வத்தின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.
தைரியம் இருக்குமிடத்தில் தான் உண்மையான தெய்வபக்தி இருக்கும்.தைரியத்தை வளர்த்துக் கொண்டால் இந்தப் பிறவியிலேயே மனிதன் அழியா இன்பம் பெறுவான்.
தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காணும் ஆற்றல் இல்லாதவன் மலைச் சிகரத்திற்குச் சென்று தவம் செய்தாலும் கடவுள் காட்சியைப் பெற முடியாது.
நாம் கேட்ட வரங்கள் அனைத்தையும் தெய்வத்திடம் உடனே பெற முடியாது.பக்திநிலையில் பக்குவம் பெற்ற பிறகே நம் எண்ணங்கள் ஈடேறத் தொடங்கும்.
ஒருவன் தனக்குத் தானே நண்பனாக இருந்தால் உலகமே அவனுக்கு நண்பனாகிவிடும். பகைவனாக இருப்பவன் இந்த உலகத்தை தனக்கு எதிரியாக்கிவிடுவான்