சிவகாசி அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கக்கன் காலனியைச் சேர்ந்த தம்பதியர் நாகராஜ்-அருணா தேவி. கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு இருவரும் கூலி வேலைக்கு சென்று இருந்தனர்.
இந்நிலையில் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முற்றிலும் தீயில் எரிந்து சேதமான அத்துடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.
இதை அறிந்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் நாகராஜ் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தீயில் சேதமான வீட்டினை சீர்மைப்பதற்கான நிவாரண நிதி உதவியையும் வழங்கினார்.
தீயில் எரிந்து நாசமான வீடு…. உடனடியாக உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி !
