ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர்கூட் பேயன் என்ற பகுதியில் ராணுவ வாகனம் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு வளைவில் திருப்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில்7 ராணுவவீரர்கள் படுகாயமடைந்தனர்.
உடனடியாக பலத்த காயமடைந்த ராணுவ வீர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இரண்டு வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 5 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





