• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி, வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிப்பு…

ByKalamegam Viswanathan

Jan 1, 2025

மதுரை சோளங்குருணி கிராமத்தில் விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி, வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிப்பு,

சோளங்குருணியில் 60 ஏக்கரில் விவசாயம் செய்த 70 விவசாய குடும்பங்களின் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள விளைபயிர்கள் தண்ணீரால் நாசம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி கிராம் உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சோளங்குருணி கண்மாயில் நிலையூர் – கம்பிக்குடி கால்வாய் மூலம் கம்பிக்குடி செல்வதற்காக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதில் சோலங்குருணி கண்மாய் முழுவதும் நிறைந்த நிலையில் கிழக்குப் பக்கம் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவிற்கு நீர் புகுந்தது.

60 ஏக்கர் பரப்பளவில் சுமார் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்திரி, வெண்டை , கடலை மல்லிகை பூ பயிரிட்டுள்ளனர். விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் கத்திரிக்காய் வெண்டை மற்றும் மல்லிகை பூ செடி கடலை செடி ஆகியவை நீரில் மூழ்கி அழுகும் நிலை உருவானது.

கடந்த நான்கு வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதெல்லாம் சோளங்குருணி கண்மாயில் கிழக்கு பக்கம் வடிகால் கால்வாய் இல்லாததால் நீர்கள் விவசாய நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது இது குறித்து மாவட்ட ஆட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல்வேறு இடங்களில் மக்கள் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கை எடுத்த வில்லை.

சோளம் குருணை கிராம மக்கள் கிழக்கு பக்கம் கன்மாயில் மருகால் பாய்வதற்கான வடிகால் கால்வாய் அமைக்கவும் அல்லது தங்கள் விளைநிலங்களில் தண்ணீர் புகார் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு ஐந்து வருடங்களாக நிலையூர் கம்பிக்குடி கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீர் தங்கள் விவசாய விளை நிலங்களில் புகுந்து விடுவதால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. வருடத்திற்கு இரண்டு சாகுபடி செய்வதில் ஒரு சாகுபடி விவசாயம் செய்ய முடியாமல் பொருட்செலவும் விவசாய பெயர்களும் சேதம் அடைகின்றன இதனை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம் நீ கண்மாய் கிழக்கு பக்கம் பட்டா நிலங்கள் இருப்பதால் பொதுப்பணித்துறை கால்வாய் அமைக்க முடியாது என கூறியுள்ளனர் ஆனால் விளை நிலங்களில் பூவரும் தண்ணீரால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

60 ஏக்கர் பரப்பளவில் 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாயங்கள் பாதிப்பதால் சுமார் வருடத்திற்கு சுமார் 10 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நிலையூர் – கம்பிக்குடி கால்வாய் நீரை கால்வாய் மூலம் முறைபடுத்தி விவசாயிகள் பாதிக்காத வண்ணம் மடை அமைத்து வெளியேற்ற வேண்டும். இதனால் கோளங்குருணி விவசாயிகள் இரண்டாம் போக விவசாயம் மூலம் ஏற்படும் இழப்பினை சரி செய்து வாழ்வாதரம் காப்பாற்றபடும் என கூறினர்,