டியூஷன் சென்ற பள்ளி மாணவர்களை அதிகாலையில் தெரு நாய் கடிக்க முயன்ற போது, சிறுவர்கள் சுதாரித்து தப்பிச் சென்றனர்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பைபாஸ் ரோடு 70வது வார்டு, நேரு நகர், நேதாஜி மெயின் ரோட்டில், இன்று அதிகாலை 5.58 மணிக்கு சிறுவர்கள் இருவர் டியூஷன் செல்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது குறுக்கிட்ட மூன்று நாய்கள் இரண்டு சிறுவர்களை வழி மரித்தனர். இதில் ஒரு சிறுவன் முதலில் நின்று பின், இன்னொரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். ஒரு சிறுவன் தப்பி ஓரமாக சென்று விட்டான். பின் வந்த சிறுவனை நாய் ஒன்று கடிக்க முயன்றது. வெளியில் அவன் ஓரமாக சென்று சுதாரித்துக் கொண்டு தப்பினார்.

இதனால் இவர்கள் நாய்கடியிலிருந்து தப்பினலும், நாளுக்கு நாள் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. தினசரி 50க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்காக அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்து செல்கின்றன. மாநகராட்சி பகுதிகளில் முறையான முறையில் நாய்கள் பிடிக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கும் பொதுமக்கள் நாய் பிடி வீரர்களை பயிற்சி அளித்து, நாய்களை எப்படி பிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கமாகவே உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என மதுரை மாநகர மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.