மதுரையில் ரேஷன் அரிசி, பருப்பை கடத்திய பாண்டியன் கூட்டுறவு கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டது.
மதுரை உணவு பொருள் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது பசும்பொன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்த போது ரேஷன் அரிசி, 250கிலோ மற்றும் 250 கிலோ பருப்புகள் இருந்துள்ளது.


உடனடியாக இது குறித்து மேலும் விசாரித்த பொழுது ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டு வரும் பாண்டியன் கூட்டுறவு ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் தில்லை நடராஜன் அவர் வீட்டுக்கு கடத்தி செல்ல முயன்ற போது அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.