• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரை வரவேண்டிய 4 விமானங்கள் ரத்து.

ByKalamegam Viswanathan

Nov 30, 2024

மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல் மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி வானிலை மாற்றம் காரணமாக
சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானங்கள் 4 ரத்து.

மதுரையில் இருந்து சென்னை சென்ற இன்டிகோ விமானத்தில் 66 பயணிகள் பயணம் செய்தனர் சென்னையில் வானிலை காரணத்தால் விமானம் தரையிறங்க முடியாததால் 66 பயணிகளுடன் மீண்டும் மதுரை மாநகரில் வந்தடைந்தது.

காலை ஏழு 40 மணியளவில் சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மதுரையில் இருந்து காலை 8 10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றது. சென்னையில் பெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தரையிறங்க முடியாமல் சென்னையில் இருந்து மீண்டும் மதுரை வந்தடைந்தது.

மேலும் சென்னை புயல் காரணமாக சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது