• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

2500 அடி உயரமுள்ள பிரான்மலையில் கார்த்திகை தீப விழா

சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்ததாக கூறப்படும் பரம்புமலை என்னும் பிரான்மலை சுற்றுலாத் தலமாக உள்ளது. குன்றகுடி ஆதினத்திற்கு உட்பட்ட மங்கைபாகர் தேனம்மை கோயில் பாண்டி 14 கோயில்களில் ஐந்தவது தலமாக உள்ளது.

ஆகாயம், பூமி பாதளம் என மூன்று நிலைகளில் சிவன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டு 2500 அடி உயர மலை உச்சியில் மாலை 4.50 மணிக்கு மலை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பாலமுருகன் தெய்வீக பேரவை சார்பாக பாலமுருகன் சன்னதி முன்பு தீபம் ஏற்றப்பட்டது. மலை தீபம் ஏற்றியதை தொடர்ந்து பிரான்மலை சுற்றி 20 கிலோமீட்டர் கிராம மக்கள் தீபத்தை பார்த்த பிறகுதான் கர்த்திகை விரதத்தை விடுவது வழக்கம். மலை தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து மங்கைபாகர் தேனம்மை கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.