நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சியில் இந்துக் கடவுள் ஐய்யப்பனை அவமரியாதை செய்யும் வகையில் பாடியதாக ‘கானா’ பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் பாஜக ஊடகப்பிரிவு சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
2020 இல் பா.ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையம் நடத்திய நிகழ்ச்சியில், ஐயப்பனை குறிவைத்து ஐயப்பன் பக்தர்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் பாடலை இசை வாணி பாடினார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் பரவியதால், இந்துக் கடவுளான ஐயப்பனையும் ஐயப்ப பக்தர்களையும் அவமரியாதை செய்த கானா பாடகி மற்றும் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழந்தது இதனைத் தொடர்ந்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த வருடம் நீலம் கலாச்சார மையம் சார்பில் மார்கழி மக்கள் இசை என்னும் நிகழ்ச்சியினை நடத்தினர் அதில் தொடர்ந்து இந்து மத கடவுள்களை குறிப்பாக ஐயப்பனை பற்றி பாடிய பாடல்கள் ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற பாடல்களை பொதுவெளியில் மற்றும் இசை நிகழ்ச்சியில் பாடத்தடை செய்து இந்து மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாய் செயல்படும் கானா பாடகி இசைவாணி மற்றும் நீளம் பண்பாட்டு மையத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.